அண்மைய செய்திகள்

recent
-

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார். இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் 1993 – 1994 வரை அவர் முதலில் பிரதமராக நியமிக்கப்பட்டார். 

 அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2004 வரை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். ஜனவரி 2015 இல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தலில் அவர் கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் ஆகஸ்ட் 2015 பொதுத்தேர்தலில் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. 2018 ஒக்டோபரில் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிய அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு, மிண்டும் 2018 டிசம்பரில் அவரை பிரதமராக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நவம்பர் 2019 இல், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்

.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு Reviewed by Author on May 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.