அண்மைய செய்திகள்

recent
-

இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தீர்மானம்


நாட்டில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

 இதன்படி, சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைசார்ந்த வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறுந்தூர போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் பெருமளவு இடைநிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே, நகரபுற பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிராமபுற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

 
இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தீர்மானம் Reviewed by Author on June 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.