அண்மைய செய்திகள்

recent
-

பயன்படுத்தப்படாத காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத காணிகளையும் கண்டறிந்து பயிர்ச் செய்கைக்கான துரித வேலைத்திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தோட்டக் கம்பனிகள் 9,000 ஹெக்டெயர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலத்தை வைத்துள்ளன. 23 நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு அவற்றை நடவு செய்பவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார்.பெருந்தோட்டத்துறையின் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ராஜபக்ஷ தனது கருத்துகளை வெளியிட்டார்.

 தேயிலை ஏற்றுமதியில் நாட்டின் அந்நியச் செலாவணி வருமானம் வெளிப்படைத் தன்மையுடன் பேணப்பட வேண்டும் என்றும், தேயிலை ஏலத்தை டொலரில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தொழிற்சாலைகளுக்கு முறையான எரிபொருள் விநியோகத் திட்டத்தின் அவசியம் மற்றும் பெருந்தோட்டத் துறையின் ஏனைய தேவைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விடுவிப்பதற்கு முன்னுரிமை வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பயன்படுத்தப்படாத காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் Reviewed by Author on June 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.