அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு: அறுவர் பலி!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர். 36க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 

 ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம். தாக்குதலை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் 22 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபரான ராபர்ட் இ. கிரிமோ ஓட்டிக்கொண்டிருந்த வாகனத்தைக் காவல்துறையினர் சுற்றி வளைத்தது 'ஏபிசி' ஊடகம் வெளியிட்ட காணொளியில் பதிவாகியிருந்தது. கைகளை உயர்த்தியபடி கிரிமோ வாகனத்திலிருந்து வெளியே வந்தது தெரிந்தது. அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.



அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு: அறுவர் பலி! Reviewed by Author on July 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.