அண்மைய செய்திகள்

recent
-

வாகனங்களை பழுது பார்ப்பதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் மன்னார் நகரசபை-என்ற செய்திக்கு மன்னார் நகரமுதல்வரின் விளக்கம்

வாகனங்களை பழுது பார்ப்பதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் மன்னார் நகரசபை மற்றும் மாவட்டசெயலகம்.

 மேற்படி தலைப்பின் கீழ் நியூ மன்னார் இணையம் /IBCதமிழ் ஆகியவற்றில்
வெளிவந்த  கட்டுரை தொடர்பாக மன்னார் நகரசபையின் தலைவர் என்ற வகையில் சில தெளிவுபடுத்தல்களை அறியத்தருகின்றேன்.

 மன்னார் நகரசபையில் 12 வாகனங்கள் தொடர்பான செலவின விபரங்கள் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் சபையில்  மொத்தம் 35 வாகனங்கள்
பயன்பாட்டில் உள்ளது என்பதே உண்மை.

எமது சபை வாகனங்கள் தொடர்பாக எமது செயற்பாடுகள் என்னவென்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

மன்னார் நகரசபையின் வாகனங்கள் 04 வகையாக வகைப்படுத்தப்பட்டு செலவின வாக்கு தலைப்புகளின் கீழ் செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதே அலுவலக நடைமுறையாகும்.

அந்தவகையில்
அலுவலக நிர்வாகம்,சுகாதாரசேவை,நலன்புரி,நீர் விநியோகம் ஆகிய
தலைப்புக்களின் கீழ் சபை வாகனங்கள் வாக்கு தலைப்பு ரீதியாக
பிரிக்கப்பட்டு செலவுகளும் வருமானங்களும் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நகரசபை அலுவலக நிர்வாக தலைப்பின் கீழ் 4
வாகனங்களின் 5 வருட செலவீனமே 41 இலட்சமாகும். 

குறித்த செய்தியில் தலைவரால் பயன்படுத்தப்படும் வாகனத்தின் செலவீனம் என பிழையான தகவலை வழங்கி தலைவருக்கும் அபகீர்த்தியை ஏற்படத்த எத்தனிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி செய்தியில் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் நகரசபை வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். நகரசபையானது தினமும் 7 கழிவகற்றும் வாகனங்கள்
நகரப்பிரதேசம் முழுவதும் கழிவுகளை சேகரித்து ஏறத்தாழ 20 Km
தூரத்திலுள்ள பாப்பாமோட்டை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில்
கழிவுகளைக் கொட்டி வருகின்றது. 
ஒரு வாகனம் ஒரு நாளையில் 3 முறை
பாப்பாமோட்டை சென்று வருகின்றது. ஏறத்தாழ ஒரு வாகனம் 120 KM  தினமும்சென்று வருவதுடன் 7 நாட்களும் கழிவகற்றும் செயற்பாடுகள் நடைபெறுகின்றது.

 அண்ணளவாக 7 வாகனங்களும் ஒரு நாளைக்கு 840 Km நாளந்தமும், 5880 Km
வாரந்தமும் பயன்படுத்தப்படுகின்றது.


இவற்றிற்கான பெறுமான தேய்வு ரயர், பெற்றரி சேர்விஸ் அனைத்தும் இதற்குள்அடங்குகின்றது. அத்துடன் திண்மக்கழிவகற்றும் / Gully Bowser   மூன்றும் மாவட்டத்தின் எப்பாகத்திற்கும் சென்று Toilet waste collection
மேற்கொள்வதுடன் பொது மலசலகூடத்திற்கு இலவச சேவையையும் வழங்குகின்றது.

இதற்கான கட்டணத்தையும் அறவிடுகின்றது. மற்றும் JCB, Roller  வாகனங்களும்கட்டணம் செலுத்தப்படும் வேலைகளையும், பொது வேலைகளையும் மேற்கொள்கின்றது.
Water Bowser  நாளாந்தம் பொது மலசலகூடம், விலங்கறுமனை, மீன்சந்தை,
பாப்பாமோட்டை நிலையம் போன்ற பொது இடங்களுக்கு இலவச சேவையினை மேற்கொண்டு
வருகின்றது. இவற்றிற்கான தேய்மானம், செலவீனம் என்பவற்றை கருத்தில்
கொள்ளாது வெறுமனே  விபரத்தை குறிப்பிட்டுள்ளதானது வேண்டுமென்றே
சபை செயற்பாடுகளுக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக அமைகின்றது. 

அத்தடன் சபையானது கடந்த காலங்களில்  ஏறத்தாழ  5 கழிவகற்றும் பெட்டிகளை புதிதாக நவீன முறையில் பெருப்பித்து சேவையினை மேற்கொள்கின்றது. இதற்கான செலவீனமும் இதில் அடங்குகின்றது.

மற்றும் அலுவலக திருத்த வேலைகள் அனைத்தும் சாரதியால் எழுத்து மூலம்
தெரியப்படுத்தப்படும்போது சபை திருத்துனர் பார்வையிட்டு அவர்களால் அதனை செயற்படுத்தமுடியாத வேலைகள் அனைத்தும் இயந்திரப் பொறியியலாளர் அறிக்கை பெறப்பட்டு 0505கூறுவிலைகள் கோரப்பட்டு தலைவர்    செயலாளர் பிராந்திய உள்ளூராட்சி அலுவலர் பிரதிநிதி  மற்றும் வெளிதிணைக்களத்தில் இருந்து பதவிநிலை உத்தியோகத்தர் அடங்கலான குழுவின் மூலமாகவே தீர்மானிக்கப்படுவதுடன் வேலை முடிவுற்றபின் மீளவும் இயந்திரப்பொறியியலாளரின் திருப்திகர அறிக்கை பெறப்பட்ட பின்னரே கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் இங்கே குறிப்பிடுவது போல் துஸ்பிரயோகமோ மோசடிகளோ இடம்பெறுவதில்லை.

 மேலும் இதனை பரிசீலிக்க மாதந்தம் உள்ளக
கணக்காய்வு மாகாண கணக்காய்வு  மத்திய கணக்காய்வு  நிறுவனங்களினால் பரீட்சிக்கப்படுகின்றன.

 மேலும் மன்னார் நகரசபையானது தொடர்ச்சியாக கடந்த மூன்று வருடங்களாக சிறந்த கணக்கீட்டு நடைமுறைக்காக தேசிய ரீதியாக விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .

 மேலும் குறித்த செய்தியில்
 கூறப்பட்டபடி தலைவர் தனது தனிப்பட்ட தேவைக்காக 06 தடவைகள்
மாவட்டத்திற்கு வெளியே சென்று வந்துள்ளார் எனக்குறிப்பிட்டுள்ளார்.

 பிரதம செயலாளரின் சுற்றுநிறுபத்திற்கு அமைவாக முறையான உள்ளூராட்சி அமைச்சு
செயலாளரின் அனுமதிபெற்று எரிபொருள் செலவீனத்தை தலைவர் செலுத்தி
சென்றுவருவதற்கான சுற்றறிக்கை உள்ளது


எமது சபையால் கடந்த 05 வருடங்கள் குறித்த வாகனங்களைக்கொண்டு பெறப்பட்ட
வருமானம் ஏறத்தாழ 38,692,156.00 ரூபாவாகும். பொது வேலைக்கான செலவீனம்
52,727,450.00 ரூபாவாகும். விபரம் பின்வருமாறு.



---

இந்த விடையம் சம்பந்தமாக  நியூமன்னார் ஊடகத்தில் வந்த செய்தியை பார்வையிடுவதற்கு  இங்கே அழுத்தவும் 
வீடியோ லிங்க் - 







நியூமன்னார் செய்திக்கு மறுப்பு 
வாகனங்களை பழுது பார்ப்பதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் மன்னார் நகரசபை-என்ற செய்திக்கு மன்னார் நகரமுதல்வரின் விளக்கம் Reviewed by Admin on August 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.