அண்மைய செய்திகள்

recent
-

கணினி கட்டமைப்பில் கோளாறு: அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியது

அமெரிக்கா முழுவதும் இன்று விமான சேவை திடீரென முடங்கியது. விமானங்கள் அனைத்தும் அவசரமாக ஆங்காங்கே தரையிறக்கப்பட்டன. முன்னெப்போதும் இல்லாத வகையில், விமான போக்குவரத்து துறையின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானங்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

 கோளாறுகளை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விமான சேவை முடங்கியதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் பல விமான நிலையங்களில் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். கணினி கட்டமைப்பு திடீரென செயலிழந்தமையினால், 400-க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களை தரையிறக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு உள்வரும் மற்றும் வௌியேறும் 760 விமானங்கள் தாமதமடைந்துள்ளதாக FlightAware இணையத்தளம் தெரிவித்துள்ளது.


கணினி கட்டமைப்பில் கோளாறு: அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியது Reviewed by Author on January 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.