அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு : தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!

 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

2023 இல் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐத் தாண்டியுள்ளதுடன் தொடர்ந்தும் இலங்கை டெங்கு நோய்த்தாக்க அபாயத்திலிருந்து வெளியேறவில்லை எனவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி, ஜூன் 03 ஆம் திகதி வரை, 2023 இல் இதுவரை மொத்தம் 40,206 பேர்வரை டெங்கு நோய்த்தாக்கத்திற்குஉள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 8,970 பேர் டெங்கு நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மேல் மாகாணத்தில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகாணங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 60 அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

அத்துடன், மே மாதத்தில் 9,290 பேர் டெங்கு நோய்த்தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், ஜனவரி 2023 முதல் மொத்தம் 25 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெங்குப் பரவலைத் தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்குமாறும், சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு : தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை! Reviewed by Author on June 03, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.