வவுனியாகளஞ்சியசாலை ஒன்றில் பாரிய தீ விபத்து!
வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தொழில்சாலையில் பணி புரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்ற நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அப் பகுதி மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீர்தாரை வீசி நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் தீ விபத்தில் தொழிற்சாலை முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் நாசமாகியுள்ளது.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Reviewed by Author
on
June 25, 2024
Rating:


No comments:
Post a Comment