அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேசத்தில் உள்ள கிராமிய சிவில் பாதுகாப்பு குழுக்களின் நடவடிக்கை தொடர்பான ஒன்றுகூடல்

நேற்று காலை 10 மணியளவில் முசலி பிரதேச செயலகத்தில் உள்ள கேட்போர் கட்டத்தில் சிலாவத்துறை நிலைய பொறுப்பதிகாரி சி.சி.ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்றது. 

பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட உதவி பொலிஸ் அதிகாரி பந்துவத்த கழந்து கொண்டார் அவர் மேலும் தெரிவிக்கையில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாட்டினால் தற்போது முசலி பிரதேசத்தில் குற்றசெயல்கள் 65 வீதம் அளவுக்கு குறைந்துள்ளது என தெரிவித்தார். 

குழுக்களிடம் மக்களின் பிரச்சினை பற்றி வினசிய போது இந்திய விட்டுத்திட்டத்திற்கு மண்பெற்று கொள்ளவதில் விசேட அதிரடி படையினரின் நடவடிக்கையினால் மண்பெற்று கொள்வதில் பல பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டி உள்ளது. 

அதே போன்று மண் பெற்று கொள்வதில் பிரதேச செயலகத்தின் அனுமதி மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் அனுமதி கிடைக்க பெற்றாலும் கடற்படை அதிகாரிகளின் அனுமதியினை பெற்று கொள்வதில் பல மணித்தியாலயங்கள் காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. என்றும் தெரிவித்தனர் இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






எஸ்.எச்.எம்.வாஜித் 


முசலி பிரதேசத்தில் உள்ள கிராமிய சிவில் பாதுகாப்பு குழுக்களின் நடவடிக்கை தொடர்பான ஒன்றுகூடல் Reviewed by NEWMANNAR on March 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.