அரச உத்தியோகத்தர்களுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி வாய் மூலப் பரீட்சை ஒக்டோபர் மாதம்
இரண்டாம் மொழி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சித்தியடைந்து வாய் மூலப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மாகாண மட்டத்தில் நடைபெறவுள்ளதாக அரச கரும மொழிகள் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பொதுநிர்வாக சுற்றறிக்கை 01/2007இன் பிரகாரம் 2007.01.01ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் அரசாங்க சேவையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் தமது நியமனத் திகதியிலிருந்து 05 வருட காலத்திற்குள் தமது சேவைக்குரிய அல்லது பதவிக்குரிய அரச கரும மொழிகள் தேர்ச்சியை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் பரீட்சை நடத்தப்படுவதோடு இப்பரீட்சை எழுத்துப்பரீட்சை மற்றும் வாய்மூலப் பரீட்சை எனும் இரு பகுதிகளைக் கொண்டமையும். பொது நிர்வாக சுற்றறிக்கை 01/2014 யின் பிரகாரம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சித்தியடைந்த அரச உத்தியோகத்தர்கள் வாய் மூல பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மாகாண மட்டத்தில் நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தன. இது தொடர்பில் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தது.
இலங்கை பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம் மற்றும் தமிழை இரண்டாம் மொழியாகக் கொண்டு சித்தியடைகின்ற உத்தியோகத்தர்கள் அரச கரும மொழிகள் தேர்ச்சிப் பரீட்சையின் எழுத்துப் பரீட்சையிலிருந்து விடுவிக்கப்படுவதோடு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் வாய்மூல பரீட்சைக்கு தோற்றுதல் வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
அரச உத்தியோகத்தர்களுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி வாய் மூலப் பரீட்சை ஒக்டோபர் மாதம்
Reviewed by NEWMANNAR
on
September 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 06, 2014
Rating:


No comments:
Post a Comment