நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது
யாழ்ப்பாணத்தில் 4 கிலோகிராம் கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் இன்று (30) அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது
Reviewed by Vijithan
on
December 30, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 30, 2025
Rating:


No comments:
Post a Comment