அமெரிக்காவின் இரண்டு பெரிய விமானங்கள் நாட்டை வந்தடைந்தன
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் அடையாளம் கண்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால விநியோகப் பொருட்களான,கூடாரங்கள், நீர், சுகாதார வசதிகள், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை கொண்டு செல்ல இந்த அணி இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது.
இந்த திட்டம், உயிர் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் போக்குவரத்து மற்றும் விநியோக பலத்தை அளிக்கும் என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
Reviewed by Vijithan
on
December 07, 2025
Rating:


No comments:
Post a Comment