அண்மைய செய்திகள்

recent
-

8 வயது சிறுமி துஸ்பிரயோகம் குற்றவாளிக்கு கடூழிய சிறைதண்ட

 மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மன்னார் மாகாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ திரு. எம். மிஹால் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார். எதிரி தரப்பிற்காக சட்டத்தரணி திரு. தினேஷன் அவர்கள் ஆஜராகியிருந்தார்.


வழக்குத் தொடுநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி திரு. ஆறுமுகம் தனுஷன் அவர்கள் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார்.


தண்டனை குறித்த தனது சமர்ப்பணத்தில், அரச சட்டவாதி திரு. தனுஷன் அவர்கள், "இக்குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்" கடுமையாக வலியுறுத்தினார். மேலும், "எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான குற்றங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கும் பொருட்டு, குற்றவாளிக்கு அதியுச்ச கட்டாய சிறைத்தண்டனை வழங்க வேண்டும்" எனவும், "கொடூரமான இந்த செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நட்டஈட்டினைப் பெற்றுத் தருமாறும்" மன்றை அவர் கோரினார்.


அரச சட்டவாதி அவர்களின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட கௌரவ நீதிபதி அவர்கள், குற்றவாளிக்கு 8 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.


அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டஈடாக 200,000/- ரூபா (இரண்டு இலட்சம் ரூபா) தண்டப்பணம் செலுத்துமாறும் குற்றவாளிக்குக் கட்டளையிட்டு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.





8 வயது சிறுமி துஸ்பிரயோகம் குற்றவாளிக்கு கடூழிய சிறைதண்ட Reviewed by Vijithan on November 12, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.