சுவிசில் உச்சம் தொடும் மருத்துவ காப்பீட்டு கட்டணம்
சுவிட்சர்லாந்தில் மருத்துவ காப்பீட்டிற்கு செலுத்தி வரும் கட்டணம் தொகை உயர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிசில் மருத்துவ காப்பீட்டிற்கான கட்டண தொகை அடுத்த வருடத்தில் இருந்து 3.8 சதவிகிதம் உயரும் என்றும், அதேபோல் வாட் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு 14.1 சதவிகிதம் வரை உயரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிசில் உள்ள அனைவரும் தனியார் காப்பீடு நிறுவனத்திலிருந்து அந்த மாகாணத்துக்கு ஏற்ப மருத்துவ காப்பீடு எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல் காப்பீட்டு திட்டத்தை வருடத்திற்கு ஒரு முறை புதுபித்து கொள்ள வேண்டும்.
கடந்த 2013ம் ஆண்டு 1.5 சதவிகிதமும், 2014ம் ஆண்டு 2.2 சதவிகிதமும் உயர்த்தப்பட்ட மருத்துவ காப்பீடு, அடுத்த வருடம் 3.3 சதவிகிதமும், வாட் மாகாணத்தில் 14.1 சதவிகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜுரா மாகாணத்தில் 13 சதவிகிதமும், மற்ற மாகாணங்களில் 3.3 சதவிகிதலிருந்து அதிகபட்சமாக 14 சதவிகிதமாக உயர உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் அலன் பெர்ஸ் தெரிவித்துள்ளார்.
சுவிசில் உச்சம் தொடும் மருத்துவ காப்பீட்டு கட்டணம்
Reviewed by NEWMANNAR
on
September 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 03, 2014
Rating:


No comments:
Post a Comment