சமாதானத்தையும்,அன்பையும் பகிர்ந்து கொள்வோம்-புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் செல்வம்,வினோ எம்.பி

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
நாளும் பொழுதும் தென்னிலங்கை அரசியலில் அதிரடி, மாற்றங்களும், குழப்பங்களும், அறிவிப்புக்களும் என்றுமில்லாதவாறு ஏட்டிக்கு போட்டியாக நடந்தேருகின்றன.
அனைத்துமே பெரும்பான்மை சமூகத்தின் நலன் சார்ந்த விடயங்களே தவிர சிறுபான்மை தமிழ் பேசும் இனம் சார்ந்தவைகள் அரிதே.
சிறுபான்மைக்குள்ளும் சிறுபான்மையாக வன்னி மக்கள் புறந்தள்ளப்படுவது இன்னும் வேதனையான விடயம்.
காணாமல் போயிருக்கும் உறவுகளுக்காக கதறும் சத்தம் வானைத் தொடுகிறது. ஆனால் கொழும்பின் காதுகளுக்கு மட்டும் அது கேட்பதில்லை.
தமிழ் அரசியல் கைதிகளின் நீடித்த சிறை வாழ்வுக்கு முடிவு காண மாற்றங்கள் உதவவில்லை.
சொந்த நிலங்களிலும், வீடுகளிலும் குடியிருக்கும் உரிமை மாற்றத்திலும் மறுக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் அவல வாழ்வும், துன்பங்களும், துயரங்களும் தொடர் கதையாகவே நீள்கின்றது.
எம்மை ஆள்வோரையும், அடக்க நினைப்போரையும் நல் வழிப்படுத்த, நல்ல சிந்தனைகளை அவர்களின் நெஞ்சங்களில் நிலை நிறுத்த இப் புதிய ஆண்டில் இறைவன் அவர்களை ஆட்கொள்ளட்டும் என இப் புதிய ஆண்டில் பிரார்த்தனை செய்வோம்.
நம்பிக்கையையும், சமாதானத்தையும், அன்பையும் பரஸ்பரம் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு புதிய ஆண்டில் கால் பதிக்கும் அனைத்து மக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றோம்.
செல்வம் அடைக்கலநாதன்,
எஸ்.வினோ நோகராதலிங்கம்
பாராளுமன்ற உறுப்பினர்கள்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு
வன்னி மாவட்டம்
சமாதானத்தையும்,அன்பையும் பகிர்ந்து கொள்வோம்-புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் செல்வம்,வினோ எம்.பி
Reviewed by NEWMANNAR
on
April 14, 2015
Rating:

No comments:
Post a Comment