அண்மைய செய்திகள்

recent
-

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாதாள உலகக்குழுத் தலைவன் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபியான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றுமொரு சந்தேகநபரை, ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு சந்தேகநபர்களையும், இன்று (07) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 

 

இதனையடுத்து, சந்தேகநபர்களை ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டார். 





கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு Reviewed by Vijithan on January 07, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.