அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மண்ணிலே முதற்தடவையாக வெகுவிமரிசையாக நடைபெற்ற கம்பன் விழா-2015

மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தில் ஏற்பாட்டில் கம்பன் விழா இன்று ஞாயிற்றுக் கிழமை (21) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் ஆரம்பமானது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் ஆரம்பமானது.

அகில இலங்கை கம்பர் கழகத்தின் அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் முன்னிலையில் நடைபெறும் இவ் விழாவுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், நானாட்டான் பிரதேச செயலாளர் எம்.பரமதாசன், முசலி பிரதேச செயலாளர் செ.கேதீஸ்வரன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கிரிஸ் கந்தகுமார் மடு பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசோதி, மன்னார் உதவி பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போதுசிறப்புப்பட்டிமன்றம்,விவாதமேடை,கவியரங்கம்,கருத்துக்களம்,மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.














மன்னார் மண்ணிலே முதற்தடவையாக வெகுவிமரிசையாக நடைபெற்ற கம்பன் விழா-2015 Reviewed by NEWMANNAR on June 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.