அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் 'சதொச' விற்பனை நிலையத்திற்கு சீல் வைப்பு.

மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள 'சதொச' விற்பனை நிலையத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூடுமாறு மன்னார் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை(23) உத்தரவிட்டுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் உள்ள சுகாதார குறைபாடுகளை ஆராய்வதற்காக கடந்த 18 ஆம் திகதி மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழு விஜயம் மேற்கொண்டு சோதனைகளை மேற்கொண்ட நிலையில் மன்னார் 'சதொச' விற்பனை நிலையத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

இதன் போது மனித பாவனைக்கு உதவாத 3 மூடை உலர் உணவுகள் மீட்கப்பட்டதோடு 'சதொச' விற்பனை நிலையம் மற்றும் கலஞ்சிய சாலை பகுதிகளில் அதிகலவான எலிகளின் நடமாட்டத்தை கண்டு கொண்டதோடு எலியின் கழிவுகள் அப்பகுதியில் காணப்பட்டதையும் கண்டு கொண்டனர்.

இந்த நிலையில் குறித்த 'சதொச' விற்பனை நிலைய அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையினை பொது சுகாதார வைத்திய அதிகாரி குழு விடுத்ததோடு 3 தினங்களுக்குள் விற்பனை நிலையத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர்.

-இந்த நிலையில் நேற்று(23) செவ்வாய்க்கிழமை காலை பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழு சதொச விற்பனை நிலையத்திற்குச் சென்று நிலமையை பார்வையிட்டனர்.

-எனினும் குறித்த விற்பனை நிலையத்தில் உள்ள குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.

-இந்த நிலையில் நேற்று(23) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் ஏற்கனவே 'சதொச' விற்பனை நிலையத்தில் மீட்கப்பட்ட மனித பாவனைக்கு உதவாத உலர் உணவுகளை நீதிமன்றத்தில் பாரப்படுத்தியதோடு 'சதொச' விற்பனை நிலையத்திற்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சதொச விற்பனை நிலையத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூடுமாறு உத்தரவிட்டார்.

இதற்கமைவாக குறித்த 'சதொச' விற்பனை நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது.





 -மன்னார் நிருபர்

(24-06-2015)

மன்னார் 'சதொச' விற்பனை நிலையத்திற்கு சீல் வைப்பு. Reviewed by NEWMANNAR on June 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.