ஐஸ் கட்டியில் தொடர்ந்து யோகா செய்த கின்னஸ் சாதனையாளர்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஐஸ் கட்டியில் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் யோகா செய்து கின்னஸ் சாதனைக்கு முயற்சித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தன்று, கடலூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஜி.பி.விஜயகுமார் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
அவர், 50 முதல் 60 கிலோ எடையும் 10 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்ட 18 ஐஸ் கட்டிகளை ஒன்றாக அடுக்கி வைத்து, அதன் மீது ஏறி நின்று தொடர்ந்து 3 மணி நேரம் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்யப்போவதாக அறிவித்தார்.
இவ்வாறு 3 மணி நேரம் தொடர்ந்து யோகா செய்யும்பட்சத்தில் அது கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம் பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
பின்னர் அவர் கூறியபடியே, ஐஸ்கட்டிகளின் மீது ஏறி நின்றவாறு பல்வேறு யோகா ஆசனங்களை 2 மணி நேரம் 35 நிமிடங்கள் 36 வினாடிகள் செய்துள்ளார்.
இதனால் விஜயகுமாருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்துள்ளது.
மேலும், இவர் ஏற்கெனவே ஐஸ் கட்டியில் தொடர்ந்து 2 மணி நேரம் நின்று யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
ஐஸ் கட்டியில் தொடர்ந்து யோகா செய்த கின்னஸ் சாதனையாளர்
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment