அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை நேரத்தில் சீருடையுடன் வெளியில் நடமாடும் மாணவர்கள் கைதாவர்! யாழ். பொலிஸ் அதிகாரி


தேவையற்ற விதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் வெளியில் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு 14 நாட்களோ அதற்கு அதிகமாகவோ விளக்கமறியலில் வைக்கப்படுவர் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது. அதன் போதே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்கால சமூகமாக இருப்பவர்கள் இன்றைய மாணவர்கள். அவர்களது எதிர்காலம் சிறப்பதற்கு என்ன சேவையை வேண்டுமானாலும் செய்வதற்கு பொலிஸாராகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

எனவே மாணவர்களாகிய நீங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய செயற்பாடுகள் மோசமான முறையில் இடம்பெற்றால் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் தயங்கமாட்டோம்.

பாடசாலை நேரத்தில் பாடசாலை சீருடையுடன் தேவையற்ற முறையில் வீதியில் திரிந்தால் அல்லது சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 14 நாட்களோ அதற்கு அதிகமாகவோ தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அத்துடன் பாடசாலை வளாகத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் பாபுள், வெற்றிலை, சிகரட், பியர் போன்ற போதைப்பொருட்களை பாடசாலை மாணவர்கள் வைத்திருப்பின் அதற்கான நடவடிக்கையும் உடனடியாகவே எடுக்கப்படும்.

தெரியாதவர்களுடன் தொலைபேசியில் உரையாடுதல், அவர்கள் தரும் பொருட்களை பெறுதல் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

மேலும் விளையாட்டு நிகழ்வின் போது பியர் உள்ளிட்ட மது வகைகள் மற்றும் சிகரட் ஆகிய எவையும் நிகழ்விடத்திற்குள் கொண்டுவரக் கூடாது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் கைது செய்யப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெற்றோர்களின் அவதானக் குறைவே  பிள்ளைகளின் வன்செயல்கள் அதிகரிக்க காரணம்!- வூட்லர்

பெற்றோர்களின் அவதானம் பிள்ளைகளின் மீது குறைவாக இருப்பதே சமூகத்தில் வன்செயல்கள் அதிகரிக்க காரணம் என்று யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்தார்.

இன்று மாலை 4மணிக்கு யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்களுக்கான சந்திப்பு ஒன்று  இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், 

மாணவர்களுடைய நடத்தைகள் தொடர்பாக பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கைபேசிப்பாவனை இருக்கின்றது. அதனை அவர்களிடத்தில் இருந்து  தவிர்க்க வேண்டும்.

அத்துடன் மாணவர்கள் பாடசாலை செல்லும் போது புத்தகப்பையில் என்ன உள்ளது எதைக் கொண்டு போகின்றார்கள் என்பதை கவனித்து பாடசாலை அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் பிள்ளைகள் யாருடன் கூட்டு சேர்கிறார்கள்.குறிப்பாக யாரை நண்பர்களாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.அவர்களுடைய நடத்தை என்னவாறு இருக்கின்றது என்பதை பெற்றோர்கள் அறிந்து நல்ல நண்பர்களுடன் கூட்டு சேர வழிகாட்ட வேண்டும்.

இதேவேளை மாணவர்கள் இரவு 7 மணிக்கு பிறகும் வீடு வந்து சேராவிடில் அவர்கள் ஏன் தாமதமாக வருகிறார்கள் என்பதை கண்டறியுங்கள்.

இவ்வாறு பிள்ளை என்ன செய்கின்றது,  யாருடன் கூட்டு சேர்கின்றது,  என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஆகவே சமூகத்தில் நற்பிரஜையாக தமது பிள்ளைகள் திகழ வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைக்க வேண்டும்.

ஆகவே பெற்றோர்களே பிள்ளைகள் மட்டில் விழிப்பாக இருங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை நேரத்தில் சீருடையுடன் வெளியில் நடமாடும் மாணவர்கள் கைதாவர்! யாழ். பொலிஸ் அதிகாரி Reviewed by Author on June 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.