இலங்கையில் விற்பனையாகும் நூடுல்ஸ் இரசாயன ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன
இலங்கையின் சந்தையில் விற்பனை செய்யப்படும் நூடுல்ஸ் வகைகள், இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து நூடுல்ஸ் வகைகளும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளன. இந்தியாவில் சுமார் 50 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மெகி நூடுல்ஸ் தொகைகள் யாவும் தடை செய்யப்பட்டு அழிக்கப்பட்ட நிலையிலேயே இந்த நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளது. மனித பாவனைக்கு உகந்ததல்ல என்ற அடிப்படையிலேயே மெகி நூடுல்ஸிற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விற்பனையாகும் நூடுல்ஸ் இரசாயன ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன
Reviewed by Author
on
June 22, 2015
Rating:

No comments:
Post a Comment