கண்டமங்கலம் அய்யனாரப்பன் கோவிலில் பிரபாகரன், வீரப்பன் சிலைகள்
தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தின் கண்டமங்கலம் அருகே உள்ள அய்யனாரப்பன் கோவிலில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும் பொலிஸாரின் உத்தரவை அடுத்து, சிலைகளில், அவர்களின் அடையாள சின்னங்கள் அழிக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சடையாண்டிக்குப்பம் கிராமத்தில், அய்யனாரப்பன் கோவில் உள்ளது. 2010ல், இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகத்தில், அய்யனாரப்பன் சுவாமி சிலைக்கு அருகில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அமைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் கடந்துள்ளன.
இதனை அறிந்த பொலிஸார், சடையாண்டிக்குப்பம் கிராமத்திற்குச் சென்று, கோவிலை பார்வையிட்டு, பிரபாகரன், வீரப்பன் சிலைகளை அகற்ற உத்தரவிட்டனர்.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கு பெருமளவு பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் உத்தரவுக்கமைய பிரபாகரன் உருவச் சிலையில் இருந்த தொப்பி, பெல்ட், துப்பாக்கி மற்றும் சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சிலையில் இருந்த மீசை ஆகியவற்றை கிராம மக்கள் அகற்றினர்.
கோவிலில், பிரபாகரன், வீரப்பனுக்கு சிலை அமைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டமங்கலம் அய்யனாரப்பன் கோவிலில் பிரபாகரன், வீரப்பன் சிலைகள்
Reviewed by Author
on
June 22, 2015
Rating:

No comments:
Post a Comment