
இராணுவ முகாம்களை நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் அரங்சாங்கம் முடிவெடுப்பதில்லை. இவ்விடயம் தொடர்பில் படைத்தரப்பினரே தீர்மானம் மேற்கொள்வார்கள் என பிரதமர் ரணில் விக்கிரசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தலைமையில் கூடியது.
இதன்போது கேள்விநேர வாய்மூல விடையளிப்பின் பின்னர் எதிர்கட்சித்தலைவர் நிமால் சிரிபால டி.சில்வா, விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் குழுவின் 22 இன் கீழ் இரண்டில் விசேட கூற்றொன்றை
முன்வைத்து உரையாற்றினார்.
இதன்பின்னர் சபையில் எழுந்து நின்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல,
எதிர்க்கட்சி தலைவர் தனது உரையில் தாய்நாட்டை பாதகாப்பதற்கு எமது படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என்றார். ஆனால் யுத்தத்தை வென்ற சரத்பொன்சேகா அன்று சிறையில் அடைக்கப்பட்டார். இதுவா உங்களது தேசப்பற்று என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
No comments:
Post a Comment