ஆசிரியரை தாக்கிய மாணவன்!
மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
11 ஆம் தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு கையடக்க தொலைபேசி கொண்டு வந்தமை குறித்து கேள்வி எழுப்பியதால் ஆசிரியரை மாணவன் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியரை தாக்கிய மாணவன்!
Reviewed by Vijithan
on
October 01, 2025
Rating:

No comments:
Post a Comment