குருடர் முன் பிச்சை கேட்டு செவிடன் காதில் சங்கூதும் அரசியல்என்னிடம் இல்லை-வடமாகணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.
இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக எவ்வளவோ பிரச்சனைகள் வந்தும் முஸ்லிம் தலைமைத்துவங்களும், அரசியல்வாதிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ,மாகாணசபை உறுப்பினர்களும் மௌனம் சாதிப்பது ஏன்? என்று வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று சனிக்கிழமை(27) முசலியில் இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,,,
ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் போல் நானில்லை.ஊடகங்களில் படம் காட்டவும் பொய்யான பிரதேசவாதம் கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றவும் எம் தலைவர் எமக்கு கற்றுதரவில்லை.
குருடர் முன் பிச்சை கேட்டு செவிடர் காதில் சங்குhதுகின்ற அரசியல் என்னிடம் இல்லை.
வாக்களித்த மக்களை ஏமாற்றி வன்முறை அரசியல் செய்யும் வழி முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு கிடையாது.
உயிர் தந்த தகப்பனை போல் தனக்கென பாராளுமன்ற உறுப்பினரை வன்னியில் உருவாக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களுக்கும் வாக்களித்த மக்களையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு வந்த பாதையை மறந்து அரசியல் செய்து வருகின்றார்.
இப்படியான அரசியல் வாதிகள் போல் நானில்லை. தலைமைத்துவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாங்கள் எங்கள் சேவையைத் தொடர்வோம். தன்னைத் தானே புகழ்ந்து திரியும் அரசியல்வாதிகள் போல் நாங்கள் இல்லை எனவும் றிப்கான் பதியுதீன் கூறினார்.
இன்று என்னையும் ஒரு வடமாகாண சபை உறுப்பினராக்கிய அனைத்து மக்களுக்கும் எனது பதவிக் காலத்துள் செய்யக் கூடிய சேவைகளை இன,மத,பேதமின்றி செய்வேன். செய்து வருகின்றேன்.
நான் அரசியலில் புதியவராக இருந்தலும் என்னுடைய தேசியத் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் பாசறையின் கீழ் வளர்ந்தவன். அவரின் மக்களுக்கான சேவையிலும் செயற்பாடுகளிலும் நானும் பங்காளியாக இருப்பேன். என்னால் முடிந்ததை செய்வேன்.
இன்று வடமாகாணத்தில் முல்லைத்தீவு ,முசலி,மறிச்சுக்கட்டி,கரடிக்குழி,சன்னார் போன்ற இடங்களில் முஸ்லிம்கள் படுகின்ற இன்னல்கள் பிரச்சனைகள் ஏராளம்.
தங்கள் சொந்த மண்ணிலே குடியேற முடியாத துன்பங்கள் அத்தனை விடயத்தையும் தனி ஒரு மனிதனாக செயற்பட்டு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்ற ஒரு அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் இனவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதனை தவிர முஸ்லிம் தலைமைத்துவங்கள், அரசியல்வாதிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் குருடர் முன் பிச்சை கேட்டு செவிடர் காதில் சங்குhதுவது போல் நாடகமாடுவது ஏன்?
மேலும் இன்று நானும் ஒரு அரசியல் வாதியாக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாகிவிட்டது.
என்னால் முடிந்தவரை இந்த மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் எந்தவித பாகுபாடுமின்றி சேவையாற்றி வருகின்றேன்.
என் மண்ணில் உள்ள மக்களுக்காகவும் நான் குரல் கொடுக்க தயாராக உள்ளேன். சுயநலமற்ற அரசியல் வாதியாகவே நான் இருக்க விரும்புகிறேன்.
மக்களாலும் இறைவனாலும் தந்த பதவியை
மக்களுக்காகவும்,சமூகத்திற்காகவும் மக்களோடு மக்களாக எவ் வேளையிலும் இருந்து சேவை செய்வேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குருடர் முன் பிச்சை கேட்டு செவிடன் காதில் சங்கூதும் அரசியல்என்னிடம் இல்லை-வடமாகணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.
Reviewed by NEWMANNAR
on
June 27, 2015
Rating:

No comments:
Post a Comment