ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையில் பிரச்சினை இல்லை!- ஐக்கிய தேசியக் கட்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் சுமுக உறவு நிலவுகிறது. எனவே ஐக்கியதேசியக்கட்சியின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி விரைவில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை அறிவிப்பார் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், பொதுமக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப 100 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்க ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தது.
எனினும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க 19வது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை நாடாளுமன்ற நீடிப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 20வது திருத்தம் தொடர்பிலும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் செயற்பாடு காரணமாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான கோரிக்கையை ஐக்கிய தேசியக்கட்சி விடுத்துவருவதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பங்கு குறித்து ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு நன்கு தெரியும் என்றும் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையில் பிரச்சினை இல்லை!- ஐக்கிய தேசியக் கட்சி
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment