கிளிநொச்சியில் குளிக்க சென்ற மூன்று வயது சிறுமி மாயம்
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் மூன்று வயது சிறுமியை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதயகுமார் யர்சிகா என்ற குழந்தை கடந்த 21ஆம் திகதி தனது தாயாரருடன் வீட்டு அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில், குழந்தை குளித்து விட்டதனால் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் ஒருவருடன் குழந்தையை தாய் அனுப்பி வைத்துள்ளார்.
தாய் குளித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டில் குழந்தையை காணவில்லை என பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
வீட்டிற்கு குழந்தையை அழைத்து வந்த பக்கத்து வீட்டுகாரர் மேல் தான் சந்தேகப்படுவதாக குழந்தையின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் குளிக்க சென்ற மூன்று வயது சிறுமி மாயம்
Reviewed by Author
on
June 24, 2015
Rating:
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment