அண்மைய செய்திகள்

recent
-

மாணவிகள் குட்டை பாவாடை,சிறிய மேலாடை அணிய தடை: அகதிகளுக்காக தடை போடும் பள்ளி நிர்வாகம்


ஜேர்மனியில் பள்ளியின் அருகே அகதிகள் முகாம் உள்ளதையடுத்து மாணவிகள் குட்டை பாவாடை, சிறிய அளவிலான மேலாடை ஆகியவை அணிய பள்ளி நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
ஜேர்மனியின் பவாரியா மாநிலத்தில் உள்ள போக்கிங் நகரில் வில்ஹெல்ம் டைஸிஸ் உடற்பயிற்சி நிலையம் உள்ளது.

கடந்த வாரம் சிரியாவை சேர்ந்த 200 அகதிகள் தற்காலிகமாக இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அருகில் உள்ள பள்ளியின் தலைமையாசிரியர் மார்டின், மாணவிகளின் பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை அவசரமாக அனுப்பியுள்ளார்.

அதில், பள்ளியின் அருகில் தங்கவைக்கப்பட்டுள்ளன அகதிகள், இஸ்லாமியர்கள் மற்றும் அரபு மொழி பேசுபவர்கள். அவர்களுக்கென்று தனி கலாச்சாரம் உள்ளது.

எனவே அவர்களுடன் முரண்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக மாணவிகள் குட்டை பாவாடை, சிறிய மேலாடை ஆகியவற்றை பள்ளிக்கு அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதும், தலைமை ஆசிரியரின் இந்த முடிவுக்கு சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மாணவிகள் குட்டை பாவாடை,சிறிய மேலாடை அணிய தடை: அகதிகளுக்காக தடை போடும் பள்ளி நிர்வாகம் Reviewed by Author on June 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.