கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 510 பயணிகள் உயிர் தப்பினர்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று அதிகாலை விமானம் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர அதிகாரி தெரிவித்துள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஏ 380 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தரையிறக்கப்பட்ட விமானத்தில் 510 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 510 பயணிகள் உயிர் தப்பினர்
Reviewed by Author
on
June 26, 2015
Rating:

No comments:
Post a Comment