தேசிய வீடமைப்பு தினத்தையொட்டி மடுவில் காசோலைகள் வழங்கி வைப்பு.-Photos
தேசிய வீடமைப்பு தினத்தையொட்டியும்,காலம் சென்ற முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் பிறந்ததினத்தையொட்டியும் நேற்று (23) செவ்வாய்க்கிழமை மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
'சமட்ட செவன' வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 12 பயணாளிகளுக்கு முதலாவது கட்ட கொடுப்பணவாக நேற்று(23) வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு செயலகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மடு பிரதேசச் செயலாளர் எஸ்.சத்தியசோதி,மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் திருமதி ஆர்.சுகர்னராஜா ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.
தேசிய வீடமைப்பு தினத்தையொட்டி மடுவில் காசோலைகள் வழங்கி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 24, 2015
Rating:
No comments:
Post a Comment