அருட்தந்தை அவிதப்பரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தில் வைப்பு.
மன்னார் பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை சவரி விக்டன் அவிதப்பர் நேற்று(22) திங்கட்கிழமை மாலை கண்டி வைத்தியசாலையில் காலமானார்.
திடீர் சுகவீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அருட்தந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது அருட்தந்தையின் பூதவுடல் மன்னார் ஆயர் இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
நாளை புதன் கிழமை காலை 8.30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துவரப்பட்டு விசேட திருப்பலியின் பின் மாலை 3 மணியளவில் மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு மன்னார் மாவட்ட மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அருட்தந்தை அவிதப்பரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தில் வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
June 23, 2015
Rating:
No comments:
Post a Comment