ஒலிம்பிக் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட சித்திரப்போட்டி.-Photos
ஒலிம்பிக் தினத்தையொட்டி இன்று(23) செவ்வாய்க்கிழமை பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப்போட்டி மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
மன்னார் மற்றும் மடு கல்வி வலையங்களில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவ மாணவிகள் குறித்த சித்திரப்போட்டியில் கலந்து கொண்டனர்.
ஒலிம்பிக் தின நிகழ்வுகள் இம்முறை மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்ற நிலையில் அதன் ஒரு பிரிவாக குறித்த சித்திரப்போட்டிகள் நடாத்தப்பட்டது.
15 வயதிற்குற்பட்ட பிரிவைக்கொண்ட மாணவர்களுக்கு மூன்று தலைப்புக்களில் குறித்த சித்திரப்போட்டடி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட சித்திரப்போட்டி.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 23, 2015
Rating:
No comments:
Post a Comment