மிகக் குறுகிய காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படுகின்றது – மஹிந்த தேசப்பிரிய
இம்முறை பொதுத் தேர்தல் மிகக் குறுகிய காலத்தில் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய மிகக் குறுகிய காலத்தில் இம்முறை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 52 முதல் 65 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அமைய குறைந்தபட்ச நாட்களான 52 நாட்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அண்மைய வரலாற்றில் மிகக் குறைந்த நாட்களில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் முதல் சந்தர்ப்பமாகும்.
இதேவேளை, 19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைய தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்படும் அதிகாரங்களை பயன்படுத்தி சுயாதீனமான முறையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படுகின்றது – மஹிந்த தேசப்பிரிய
Reviewed by NEWMANNAR
on
June 29, 2015
Rating:

No comments:
Post a Comment