வாழ வழிவிடுங்கள்,,,...! அன்பானவர்களே..-மன்னார் பெனில்
அறிக்கை விடுவதும் கருத்துக் கூறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது அதை கேட்பாரும் இல்லை கேட்டாலும் செயல் வடிவம் கொடுப்பாரும் இல்லை இருந்தாலும் என் போன்றவர்கள் எதிர் நோக்கும் துன்பங்களை அறியத்தர விளைகின்றேன் ஏதாவது மாற்றம் வராதா என்ற எதிர்பார்ப்புடன்.
யுத்தத்தாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாட்கலியின் உதவியுடன் வாழும் என்னைபோன்றோர் எதிர் நோக்குகின்ர பல பிரச்சினைகள் இருந்தாலும் முக்கிய வேண்டுகோள் என்ன வென்றால் நாங்கள் எங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அரச அரச சார்பற்ற காரியாலயங்களுக்கு செல்லவேண்டி இருக்கிறது மிகுந்த சிமரத்தின் மத்தியில் எங்களது பயணத்தை மேட்கொன்டாலும் குறிப்பிட்ட அலுவலகத்துக்குள் செல்ல முடியாத நிலையில் பலதரப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம்.
காரணம் அங்கே எங்களுக்கான அணுகும் வசதி செய்யப்படாத நிலையில் வாசலுக்கு வெளியே நிற்க வேண்டி உள்ளது அப்படி வெளியே நிற்கும்பொது வழியால் செல்பவர்கள் எங்களை ஏளனமாக பார்ப்பதும் பிச்சை கேட்பதற்காக வந்திருக்கின்றோம் என நினைப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது அந்த தருணம் எங்களின் மன உளைச்சலை புரிந்து கொள்ள யாராலும் முடியாது.
அரச அரச சார்பற்ற காரியாலயங்களில் இதுபோன்ற அணுகும் வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான கால எல்லையும் குறிப்பிடப்பட்டது. அந்த குறிப்பிட்ட கால எல்லையானது 2014 ம் ஆண்டோடு முடிந்துவிட்டது.
ஒருசில இடங்களில் மட்டுமே அணுகும் வசதி கானக்கூடியதாக இருக்கின்றது பல இடங்களில் மிகவும் காஸ்ரப் படுகின்றோம் ஒருசில இடங்களுக்கு நேரில் சென்று இது சம்பந்தமாக கதைத்தும் எழுத்து மூலமாகவும் மனுக்குடுத்தும் அவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை ஒரு கூட்டம் நடக்கும் பொது இடத்துக்கு போனால் படி இருக்கும்.
உள்ளே போகமுடியாது அருகில் நிற்கும் ஐந்தாறு பேர் சேர்ந்து சக்கர நாற்காலிடன் எங்களை தூக்கி உள்ளே கொண்டு போக வேண்டும் இப்படி தூக்கி செல்வதை பார்ப்பவர்கள் எங்களின் நிலையை பரிதாபத்துடன் வேடிக்கை பார்க்கிறார்கள் இந்த நிலை எங்களுக்கு வேண்டாம். நாங்கள் இயல்பாக சென்று வரக்கூடிய வகையில் அணுகும் வசதியினை செய்து தந்து நாங்களும் வாழ வழிவிடுங்கள்
நீங்கள் வாழும் சமூகத்தில்தான் நாங்களும் வாழ்கின்றோம் எங்களையும் புரிந்து கொள்ளுங்கள் முடிந்தால் நாங்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சனைகளை நேரில் சென்று கேட்டறியுங்கள் என கருணைடன் கேட்டுக்கொள்கின்றேன்.
வலது குறைந்தோர் என்கின்ற
சொல்லை மாற்றி
அங்கவினமுற்றோர் என்றிர்கள்...
அங்கவினமுற்றோர்
என்கின்ற சொல்லை மாற்றி
ஊனமுற்றோர் என்றிர்கள்...
ஊனமுற்றோர் என்கின்ற
சொல்லை மாற்றி விசேட
தேவையுடையோர் என்றிர்கள்
விசேட தேவையுடையோர் என்கின்ற
சொல்லை மாற்றி - மற்றுத்திரனாளிகள் எனும் மட்டற்ற நாமத்தை சூட்டி உள்ளீர்களே
காலத்துக்கு காலம் உங்களுக்கு ஏற்றவகையில்
எங்களின் சொற் பெயர்களை மாற்றி மாற்றி அழைக்கும் நீங்கள்
நாளும் பொழுதும்
நாம் படும் துயரினை
கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஏனோ ...?
மன்னார் பெனில்
வாழ வழிவிடுங்கள்,,,...! அன்பானவர்களே..-மன்னார் பெனில்
Reviewed by NEWMANNAR
on
June 22, 2015
Rating:
No comments:
Post a Comment