நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - தேர்தல் ஆகஸ்ட் 17ல்
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருக்கிறார்.வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்தக் கலைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தக் கலைப்பின் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான கூட்டு அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமிக்கப்பட்டார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது.
(2ND LEAD) தேர்தல் ஆகஸ்ட் 17ல் நடைபெறும்! புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் 1ல் கூடும்
நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறும் என்று அரச அச்சகர் அறிவித்துள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றம் இன்று இரவு முதல் கலைக்கப்படுவதாக ஜனாதிபதியின் அறிவிப்பு வர்த்தமானி அறிவித்தல் அச்சிடலுக்காக அரச அச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் அந்த அறிவித்தலில் தேர்தல் திகதி, வேட்புமனுக் கோரல் திகதி மற்றும் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி என்பன குறிப்பிடப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி வேட்புமனுக் கோரல் ஜூலை 6ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் நடைபெறும்.
புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் முதலாம் திகதி கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் வர்த்தமானிக்கான அறிவித்தல் அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இன்று நள்ளிரவில் வர்த்தமானி வெளியிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு வெளியாகும் சிறப்பு வர்த்தமானியில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - தேர்தல் ஆகஸ்ட் 17ல்
Reviewed by NEWMANNAR
on
June 27, 2015
Rating:

No comments:
Post a Comment