தொகுதிவாரி முறையில் சரியான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாது: ரிசாட் பதியூதீன்

தொகுதிவாரி தேர்தல் முறையில் சரியான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ரிசாட் பதியூதீன் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்திற்கு நாம் அமைச்சரவையில் எதிர்ப்பை வெளியிட்டோம்.
உத்தேச தேர்தல் முறைமை மாற்றத்தில் சிறுபான்மை இன சமூகங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்.
புதிய முறைமையில் கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றாக வரையறுக்கப்படும்.
சிறுபான்மை இன சமூகங்களுக்கு பாரிய பிரச்சினை ஏற்படும். புதிய முறைமை அநீதியான ஓர் தேர்தல் முறைமயாகும்.
அனைத்து இன சமூகங்களுக்கும் சாதாரணமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யக்கூடிய ஒர் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
தொகுதிவாரி முறையில் சரியான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாது: ரிசாட் பதியூதீன்
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment