20வது திருத்தம், சிறிய கட்சிகளை அழித்துவிடும்!- சரத் பொன்சேகா
தேர்தல் தொடர்பான 20வது திருத்தத்துக்கு ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த திருத்தம், நாட்டில் உள்ள சிறிய ஜனநாயக கட்சிகளை அழிக்கும் செயற்பாடு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கெக்கிராவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது, கருத்துரைத்த அவர், நாட்டில் சிறிய கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன.
புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தப்பட்டால், அந்தக் கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார்.
இதனை ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் உணர்வார்கள் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
20வது திருத்தம், சிறிய கட்சிகளை அழித்துவிடும்!- சரத் பொன்சேகா
Reviewed by Author
on
June 24, 2015
Rating:
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment