வடக்கில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சினைக்கு உடனடித்தீர்வைப் பெற அமைச்சரவைப் பத்திரம்

வடக்கில் நிலத்தடி நீர் மாசடைவதால் ஏற்பட்டுள்ள குடிநீர் தொடர்பான பிரச்சினைக்கு உடனடித் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்காக புதிய திட்டங்களை உள்ளடக்கிய அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் மாதம் சமர்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
யாழ்.நகருக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் தேசிய நீர் வழங்கல் சேவைக்கான வடபிராந்திய அலுவலகக் கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கில் எழுந்துள்ள மிகப் பெரும் பிரச்சினையாக சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடையும் விவகாரம் காணப்படுகின்றது. இது தொடர்பில் நாம் உடனடியாக மாற்றுத் திட்டமொன்றை ஆராயவேண்டியுள்ளது. முன்னதாக இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட நாம் அனைவரும் உயர்மட்ட அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல்களை இரண்டு தடவைகள் மேற்கொண்டுள்ளோம்.
அதேநேரம் இரு வாரங்களுக்கு முன்னதாக இவ்விடயம் குறித்து அவசர நகர்வொன்றை முன்னெடுக்கவேண்டுமென பிரதமர் தலைமையில் கூடி ஆராய்ந்து நீர் வழங்கல் அதிகார சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளோம்.
குடிநீர் தொடர்பில் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்வதற்காக உரிய நடவடிக்கைகளை எடுத்துவரும் நாம் முதற்கட்டமாக தற்காலிக நீர்த்தாங்கிகள் மூலம் இலவச குடிநீர் வசதியை வழங்கி வருகின்றோம். நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலமாக 2 நீர்த் தாங்கிகளும் உள்ளூராட்சி சபைகள் மூலம் 10 நீர்த் தாங்கிகளும் வழங்கப்பட்டு குடிநீர் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நிலத்தடி நீர் எவ்வாறு மாசடைந்தது என ஆராய்ந்தால் அது முடிவுறாத சர்ச்சையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆதலால் அவ்வாறான ஆராய்வுக்குள் தொடர்ந்தும் சென்று கொண்டிருக்காது மாற்று தீர்வுகள் குறித்து நாம் சிந்தித்தோம்.
முதலாவதாக இரணைமடு குளத்திலிருந்து குடாநாட்டிற்கு நீர் வழங்கும் பாரிய திட்டத்தை முன்னெடுக்க முயற்சித்தோம். இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரான்ஸ் அரசின் உதவி ஆகிய கிடைத்திருந்தன.
ஏறத்தாழ 200 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்காகவே இன்று இந்த காரியாலயம் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல் கட்டடம் அமைக்கப்பெற்று விட்டது. ஆனால் செயற்திட்டம் முன்னெடுப்பதில் காலதாமதமாகிவிட்டது.
இரணைமடுத் திட்டத்தை முன்னெடுப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அச்சம் காணப்பட்டது. அதற்காக இரணைமடுக்குளத்தின் பரப்பையும் 80 ஆயிரம் சதுர அடிகளாக அமையும் வகையில் மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
அதனடிப்படையில் தற்போதுள்ள குளத்தின் கட்டமைப்பை மேலும் 40 ஆயிரம் அடிகளால் அதிகரித்தால் இப்பிரச்சினைக்கு முதற்கட்ட தீர்வை காணலாம் என்ற நிலையில் நீர்ப்பாசன திணைக்களம் கட்டுமானங்களை ஆரம்பித்துள்ளது.
இருப்பினும் இப்பிரச்சினை தொடர்ந்தும் சர்ச்சைகளாக நீடித்து வரும் நிலையில் வடமாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான உரிய தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். அத்தீர்வு விவசாயிகளின் நலன்கள் பாதிக்காத வகையில் அமையவேண்டும்.
அதேநேரம் இச் சர்ச்சைகள் ஒருபுறமிருக்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 100 மில்லியன் டொலர்களை கடனாகக் கோரியுள்ளோம். இதன்மூலம் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக முன்னெடுக்கவுள்ளோம். இதற்காக எதிர்வரும் மாதம் பாரிய மாநாடொன்றை நடத்தவுள்ளோம்.
இத்திட்டம் புதிதாக இருப்பது ஒருபுறமிருக்க இதற்கான நிதித் தேவை அதிகமாக உள்ளது. எனினும் யாழ். மக்களும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி, பிரதமர் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்வரவேண்டும்.
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இணைந்து முன்னெடுக்கும் 80 மில்லியன் டொலர் பெறுமதியான கழிவகற்றல் திட்டம் செயற்படுத் தப்படவுள்ளது.
மேலும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை களை விரைந்து எடுப்பதற்கான பொறிமுறைகளை உள்ளடக்கிய அமைச்சரவைப் பத்திரம் எதிர் வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட வுள்ளது.
இதற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தேசிய அரசாங்கம் ஒத்துழைப்பை வழங் கும் என்ற நம்பிக்கை எமக்கு உள் ளது என்றார்
வடக்கில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சினைக்கு உடனடித்தீர்வைப் பெற அமைச்சரவைப் பத்திரம்
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment