அண்மைய செய்திகள்

recent
-

உலகின் முதலாவது தமிழ் பிரதமர்.


உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை ஆனால் தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை இது தமிழனின் பெருமை

உலகில் இடம்பெயர்ந்த தமிழன் பல பெரும் பதவிகளில் இன்று வகித்து வருகிறான்.

இப்படி வாழ்ந்த தமிழன் தற்போது ஒரு நாட்டின் பிரதமர் பதவியிலும்

தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார்.

சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து.

இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. சிங்கப்பூரின் குடியரசு தலைவராக S.R.நாதன் இருந்துள்ளார். சிலர் துணைப் பிரதமராக இருந்துள்ளனர்.

அமைச்சராக தமிழர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாபிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் இருந்துள்ளார்கள். ஆனால் பிரதமராக யாரும் இருந்ததில்லை.

இப்போது 20/05/2015 அன்று முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். தமிழராக நாம் பெருமைப்படலாம்.


உலகின் முதலாவது தமிழ் பிரதமர். Reviewed by NEWMANNAR on June 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.