மன்னார் மாவட்டத்தில் முதற்தடவையாக ஒலிம்பிக்தின விழா-2015
மன்னார் மாவட்டத்தில் முதற்தடவையாக ஒலிம்பிக்தின விழா 23-06-2015 காலை ஆரம்பமாகி பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு பிரிவுகளாக சித்திரப்போட்டி நடாத்தியதோடு மாலை 4மணியளவில் மன்னார் பாலத்தில் இருந்து ஒலிம்பிக்தீபமும் ஒலிம்பிக்சின்னமும் மன்னாரைச்சேர்ந்த அனைத்து பாடசாலை மாணவர்களாலும் பவனியாக எடுத்துவரப்பட்டு மன்னார் பொது விளையாட்டரங்கில் தீபச்சுடரினை உத்தியோக பூர்வமாக ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து தேசியக் கொடியுடன் ஏனைய கொடிகள் ஏற்றும் நிகழ்வும் அதனைத்தொடர்ந்து.
சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன அத்துடன் இராணுவத்தினரின் இசைநிகழ்ச்சியும் ஆடலும் பாடலுடன் பிரதமவிருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்களின் உரையும் மக்கள் வங்கியினால் சிசுஉதான இசுறுதான வங்கிக்கணக்கு சேமிப்பு ஊக்குவிப்பு தொகையும் பரிசுகளும் ஒலிம்பிக்பவனியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதலும் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் விளையாட்டுத்துறை சம்மந்தமான நூல்தொகுதிகளும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் பிரதமவிருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களும் விளையாட்டு விவகார அமைச்சின் பணிப்பாளர் றுவான் சந்திர அவர்களும் இலங்கை ஒலிம்பிக்சங்கத்தின் உபதலைவர் தேவா ஹென்றிக் அவர்களும் தேசிய ஒலிம்பிக்சங்க செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா அவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் அரசஅதிகாரிகள் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தினை நல்ல முறையில் புனரமைத்து தருவதாகவும் கட்டிடத்தொகுதியினையும் வருகிற வருட இறுதிக்குள் அமைத்து தருவதாக உறுதி வழங்கப்பட்டுள்ளது. இப்படியான நிகழ்வுகள் மூலம் மன்னார் வளர்சிப்பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியே…
மன்னார் மாவட்டத்தில் முதற்தடவையாக ஒலிம்பிக்தின விழா-2015
Reviewed by NEWMANNAR
on
June 24, 2015
Rating:
No comments:
Post a Comment