அண்மைய செய்திகள்

recent
-

38 பேர் துடிதுடித்து பலியான இடத்தில் துளியும் இரக்கமின்றி செல்ஃபி எடுத்துக் கொண்ட சுற்றுலாப்பயணிகள்


துனிசியா நாட்டில் உள்ள கடற்கரையோர ஓய்வு விடுதியருகே தீவிரவாதியின் வெறியாட்டத்தால் 38 பேர் துடிதுடித்து பலியான இடத்தில் சுற்றுலாப்பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொண்டது சமூக ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.


துனிசியாவின் தலைநகரான துனிஸ் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சவ்ஸி கடற்கரைப் பகுதி உள்நாட்டினர் மற்றும் ஐரோப்பிய நாட்டினர் தேடிவந்து தங்கி இளைப்பாறும் சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. இங்குள்ள இம்ப்ரியல் மர்ஹபா ஓட்டல் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென புகுந்த ஒரு தீவிரவாதி, அங்கு கூடியிருந்த மக்களின் மீது இயந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான். இதில் துனிசியா, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் அயர்லாந்து நாட்டை சேர்ந்த 38 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், அற்ப ஆயுளில் இறந்து போன ஆத்மாக்கள் சாந்தியடைவதற்காக தாக்குதல் நடந்த இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்களைத் தூவி பலர் பிரார்த்தனை நடத்தினர். அப்படி மலர்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக சில சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொண்டது பலரை கொந்தளிக்கச் செய்துள்ளது.

’படுகொலை நடந்த இடத்தில் செல்பி, முட்டாள்கள். தங்கள் விதி தலைக்கு மேல் ஒரு மெல்லிய நூலில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது அவர்களுக்குப் புரியவில்லை’. ’நம்முடைய உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு மட்டுமே உள்ளது.’ என்று இது குறித்து ட்விட்டரில் பல விதமான விமர்சனங்கள் குவிந்துள்ளது. இது போன்ற இடங்களில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்க வேண்டாம் என்றும் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
38 பேர் துடிதுடித்து பலியான இடத்தில் துளியும் இரக்கமின்றி செல்ஃபி எடுத்துக் கொண்ட சுற்றுலாப்பயணிகள் Reviewed by NEWMANNAR on June 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.