'1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடு' : தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அட்டன் செனன் தோட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் தொழிற்சங்க பேதமின்றி சகலரும் கலந்து கொண்டனர். காலை 11 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் சந்தியில் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியதுடன் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
நண்பகல் 12 மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றதோடு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்..
மிக விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டால் விரைவில் மீண்டும் நாம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் முன்னெடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தனர்.
அதன்பின் அட்டன் பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.
இதேவேளை நுவரெலியாவில் பீட்று, மாக்கஸ்தோட்டை, மூன்பிளேன், நேஸ்பி போன்ற தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களும் இரண்டாவது நாளாக இன்று சுமார் ஒரு மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.
'1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடு' : தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment