அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்தும் மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்பாட்டம்



இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை கண்டித்தும் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர மீண்டும் போராட்டத்தில் ஈடுபட ; மீனவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்துறை அலுவலக வளாகத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் மீனவப்பிரதிநிதிகள் படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறுபான்மை விசைபடகு மீனவர்சங்கத் தலைவர் சேசுஇருதயம் தலைமையில் இன்று காலை அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

 கூட்டத்தில் சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்களையும் 28 படகுகளையும் விடுவிக்க வேண்டும், பாரம்பரிய கடல்பகுதியில் மின்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும், வரும் 12ந் தேதிக்குள் மீனவர்களும் படகுகளும் விடுவிக்கப்படவில்லையெனில் அடுத்தகட்ட ஒருங்கிணைந்த போராட்டததை நடத்துவது எனவும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

பின் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை கண்டித்தும் ,மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடத்தினர்  

பேட்டி1, சேசுஇருதயம் தலைவர் சிறுபான்மையினர் விசைபடகு மீனவர்சங்கம்

எங்களது படகுகளையும் மினவர்களையும் வரும் 12 ந் தேதிக்குள் மீட்டுதரவில்லையெனில் மீண்டும் தமிழகம் தழுவிய போராட்டததை நடதத திட்டமிட்டுள்ளளோம் எங்களது வாழ்ககை போராட்டமாகவே மாறிவருகிறது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு மத்திய மாநில அரசுகள் இழந்த கச்சத்தீவையாவது மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

செய்தியாளர் அ.ஆனந்தன் ராமநாதபுரம்
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்தும் மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்பாட்டம் Reviewed by NEWMANNAR on June 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.