இந்திய மீனவர்கள் அறுவரும் இராமேஷ்வரத்தை அடைந்தனர்
கச்சதீவை அண்மித்த கடற்பரப்பில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட ஆறு இந்திய மீனவர்களும் இன்று அதிகாலை தமது சொந்த ஊரான இராமேஷ்வரத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 21 ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மேற்படி மீனவ
ர்கள், தாம் பயணித்த விசைப் படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்துள்ளனர். இவர்களை மீட்ட கடற்படையினர், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்துக்கு தகவல் வழங்கினர்.
மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள், வியாழக்கிழமை (24) இரவு இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் காப்பற்றப்பட்டமையை யாழ்.இந்தியத் துணைத்தூதரகமும் உறுதிப்படுத்தியது.
இந்திய மீனவர்கள் அறுவரும் இராமேஷ்வரத்தை அடைந்தனர்
Reviewed by NEWMANNAR
on
September 27, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 27, 2015
Rating:


No comments:
Post a Comment