பாடசாலைகள் மீள திறக்கப்படும் திகதி அறிவிப்பு
பல மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், தென், வடக்கு, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும்
அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டிலுள்ள 10, 076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் எதிர்வரும் 16 திகதி மீள திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகளும்
தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
December 09, 2025
Rating:


No comments:
Post a Comment