கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய NPP பிரதேச சபை உறுப்பினர் கைது
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (26) அதிகாலை முந்தலம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிரதேச சபையின் மங்களஎலிய தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி தான் அனர்த்த நிவாரணக் கடமை நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், குறித்த உறுப்பினர் பயணித்த சிறிய லொறி வண்டி மோதி விபத்து இடம்பெற்றதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் உறுப்பினர் தன்னைத் திட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தான் முந்தலம பிரதேச செயலாளருக்குத் தெரியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற அனர்த்தக் குழுக் கூட்டத்தின் பின்னரும் குறித்த உறுப்பினர் தனக்குத் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தித் திட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், குறித்த உறுப்பினர் இன்று காலை முந்தலம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகம் நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Reviewed by Vijithan
on
December 26, 2025
Rating:


No comments:
Post a Comment