மன்னார் நகர சபையின் “மன்னார் கொம்போஸ்ட்” இயற்கை கூட்டுப்பசளை விற்பனை இன்று முதல்…
மன்னார் நகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட “மன்னார் கொம்போஸ்ட்” எனும் இயற்கை கூட்டுப்பசளையின் விற்பனையானது 21.12.2015 திகதி ஆகிய இன்று பண்டிகை கால தெருவோர வியாபார நிலையங்களில் ஒன்றாக அலுவலக பிற்புற வாயில் அருகாமையில் சபையின் செயலாளரினால் வைபக ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் குறித்த நிகழ்வில் மன்னார் கொம்போஸ்ட் பற்றி செயலாளர் கருத்து தெரிவிக்கையில் இப்பசளையானது நகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுகளிலிருந்து உக்கிய மற்றும் உக்காத பொருட்கள்; என தரம் பிரிக்கப்பட்டு அவ்வுக்கிய சேதன கழிவுகளுடன் மேலதிக சேர்மானங்களாக ஆடுää மாடு போன்ற விலங்குகளின் தோல் மற்றும் எச்சங்கள் போன்றவையும் சேர்க்கப்பட்டு பசளையாக்கல் செயன்முறைக்கு கீழ் மீள் சுழற்சி செய்யப்பட்டு 3 மாத கால பதப்படுத்தலுக்குப் பின்னர் விற்பனைக்காக பொதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன்ää இப்பசளை 100% இரசாயன பதார்த்தமற்றதுடன் பக்க விளைவற்ற பரிசீலிக்கப்பட்டு வெற்றி ஈட்டிய நம்பக தன்மைவாய்ந்த இயற்கைப் பசளையாகும்.
இவ்வுற்பத்தியானது இயற்கை சமநிலையுடன் இணைந்தவாறு பொது மக்களின் நலன் கருதி அவர்களின் வீட்டுத் தோட்டங்களுக்காகவும்ää அழகு சாதன வளர்ப்புச் செடிகளுக்காகவும் மன்னார் நகர சபையினால் தயாரிக்கப்பட்ட அதியுன்னத தயாரிப்பாகும்.
இம்மன்னார் கொம்போஸ்ட் பசளையினை பெற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்கள் எதிர்வரும் 31.12.2015 ஆம் திகதி வரை மேற்படி எமது பண்டிகை கால தெருவோர வியாபார நிலையத்திற்கும் அதன் பின்னர் எமது நகரசபை அலுவலகத்திற்கும் விஜயம் செய்து பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறிக்கொண்டதுடன்ää இவ்வியற்கை உற்பத்திப் பொருட்களினாலான நலன்கள் பற்றிய விழிப்புணர்வை எமது மக்கள் நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும் என்றும் அதனடிப்படையில் எமது சுகாதார ஊழியர்களினால் தங்கள் பிரிதேசங்களில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளினை அவர்களுக்கு வழங்கும் முன் எமது மீள் சுழற்சியின் நடவடிக்கையினை இலகுபடுத்தும் வகையில் அவற்றை உக்கிய மற்றும் உக்காத பொருட்கள் என வெவ்வேறாக சேகரித்து வழங்கியுதவ வேண்டும் என்றும் பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின் நிழல்கள் பின்வருமாறு……
மன்னார் நகர சபையின் “மன்னார் கொம்போஸ்ட்” இயற்கை கூட்டுப்பசளை விற்பனை இன்று முதல்…
Reviewed by Author
on
December 21, 2015
Rating:

No comments:
Post a Comment