"நீதியின் ஓலம்" செம்மணியில் ஆரம்பம்!
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் இன்று (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுதுத்தியே இந்த நீதியின் ஓலம்" எனும், கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் வடக்கின் ஏற்பாடுக்குழு இணைப்பாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரமிக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் இது முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
"நீதியின் ஓலம்" செம்மணியில் ஆரம்பம்!
Reviewed by Vijithan
on
August 24, 2025
Rating:
.jpg)
No comments:
Post a Comment