அண்மைய செய்திகள்

recent
-

தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 91ஆவது இடம்: போர்ப்ஸ் பட்டியல் வெளியீடு


தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகளை அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் பட்டியலிட்டு வருகிறது. இதன்படி 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 144 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தில்  உள்ளது.

வர்த்தகம், நிதி சுதந்திரம் மற்றும் ஊழல், வன்முறை போன்ற சவால்களை எதிர்கொள்வதில் மோசமான நிலையில் இருப்பதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் நிதி தலைநகராக விளங்கும் அமெரிக்கா கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் பின்தங்கி தற்போது 22ஆவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து, ஜப்பான் நாடுகள் தலா 3 இடங்கள் அதிகரித்து தற்போது முறையே 10 மற்றும் 23ஆவது இடத்தில் உள்ளன. ஜெர்மனி 2 இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்திலும், சீனா 97இல் இருந்து 94ஆவது இடத்திலும் உள்ளது.

தென்னாபிரிக்கா (47), மெக்சிகோ (53), கஜகஜ்தான்(57), ஜாம்பியா (73), கானா (79), ரஷ்யா (81), இந்தியா (97) ஆகிய நாடுகளும் இலங்கைக்கு அண்மித்த இடத்தில் உள்ளன.

 பாகிஸ்தான் 103ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 121 ஆவது இடத்திலும் உள்ளன.

தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 91ஆவது இடம்: போர்ப்ஸ் பட்டியல் வெளியீடு Reviewed by Author on December 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.