சிலுவை வடிவில் தாக்குதல்கள் நடத்துகின்றனரா? ஐ.எஸ். தீவிரவாதிகளின் மாபெரும் சதி திட்டம்...
ஐ.எஸ். தீவிரவாதிகள் மாபெரும் சிலுவை வடிவில் தங்கள் தக்குதலுக்குரிய நாடுகளை தேர்ந்தெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கத்திய நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
எனினும் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களில் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே செல்கின்றன.
மேலும் ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன .
இந்நிலையில் மாபெரும் சிலுவை வடிவில் அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதி மற்றும் அவர்களின் தாக்குதல் அச்சம் அதிகமுள்ள பகுதிகள் குறித்து சமீபத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அதில் சிலுவை வடிவில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வரைப்படத்தை வெளியிட்டுள்ள இன்ஸ்டிடியூட் ஃபோர் தி ஸ்டெடி ஓஃப் வார் , பிரித்தானியா தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிலுவை வடிவில் தாக்குதல்கள் நடத்துகின்றனரா? ஐ.எஸ். தீவிரவாதிகளின் மாபெரும் சதி திட்டம்...
Reviewed by Author
on
December 21, 2015
Rating:

No comments:
Post a Comment